×

தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலை பட்டமளிப்பு விழாவில் 165 பேருக்கு பட்டம்: ஆளுநர் வழங்கினார்

சென்னை: தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தின் 13வது பட்டமளிப்பு விழாவில் 165 பேருக்கு ஆளுநர் ரவி பட்டம் வழங்கினார். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தின் 13வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ஒன்றிய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், பல்கலை இணை வேந்தரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், துணை வேந்தர் சுந்தர் ஆகியோர் பங்கேற்றனர். பல்கலைக்கழகத்தில் முறையாக கல்வி பயின்ற 5,047 பட்டதாரிகளும், தொலைதூர கல்வி மூலம் பட்டம் பெற்ற 2,707 பேரும் என மொத்தமாக 7,754 பட்டதாரிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. பல்கலைக்கழகம் மற்றும் இணைப்பு  கல்லூரிகளை சேர்ந்த 107 பட்டதாரிகள், 58 ரேங்க் பெற்றவர்கள் என 165  பேருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பட்டங்களை வழங்கினார். மீதமுள்ள 7,689 பட்டதாரிகளுக்கு பல்கலைக்கழகத்தில் இருந்து தபால் மூலம் படம் அனுப்பி வைக்கப்படுகிறது.

Tags : Tamil ,Nadu ,University ,of Physical Education and Sports ,Governor , Tamil Nadu University of Physical Education and Sports Convocation to 165: Awarded by Governor
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...